நெருக்கடியில் இலங்கை! வியூகம் வகுக்கும் ரணில்
நாடு எதிர்க்கொண்டுள்ள சவால்களில் இருந்து மக்களை மீட்க வேண்டுமாயின், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,
நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாகியுள்ள அரசாங்கத்துடன் மோதும் பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரம் கிடையாது.
ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் ஏனைய தரப்பினர்கள் அனைவரும் ஒன்றணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டும்.
தற்போது பிரதான இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போது பிற தரப்பினருடன் மோதி, நேரத்தை வீணடிப்பது பயனற்றதாகும். கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தும் நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேசிய பொருளாதாரம், ஜனநாயகம் ஆகியவை பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. இவ்விடயம் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.