விடுதலைப்புலிகளின் ஆயுத வழங்கலை தடுக்க அமெரிக்காவை அழைத்த ரணில்
தமிழீழ போரின் போது, இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் 2002 ஆம் ஆண்டளவிள் உச்சக்கட்டத்தை பெற்றிருந்தது.
இதில் சிறிலங்கா கடற்படைக்கும் புலிகளுக்கும் இடையிலான கடல் மோதல்கள் அக்காலதில் அதிக விளம்பரம் பெற முனைந்திருந்தன.
இதற்கு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கடல்வழியாக கிடைக்கப்பெற்ற ஆயுதங்கள், மற்றும், பாதுகாப்பு நோக்கங்களுக்காக கடல் மார்க்க பயன்பாடு பெரும் பக்கபலத்தை ஏற்படுத்தியிருந்தன.
அமெரிக்க பாதுகாப்புத் துறை
ஒரு தசாப்தத்திற்குப் பிறகு(1991), 2002 ஆம் ஆண்டில், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், இலங்கை ஆயுதப்படைகள் மற்றும் விடுதலைப் புலிகள் இருவரின் விரிவான மதிப்பீட்டை அமெரிக்க பாதுகாப்புத் துறை மேற்கொண்டது.
பிற்காலங்களில், இந்த அறிக்கை விடுதலைப்புலிகளிளை எதிர்க்க சிறிலங்கா இராணுவத்துக்கு முக்கிய பங்கு வகித்ததாக சிறிஙலங்கா இராணுவத்தின் அட்மிரல் ஒப் தி ப்ளீட் வசந்த கரண்ணாகொட தொடர்பில் எழுதப்பட்ட ஒரு புத்தகம், விளக்கியுள்ளது.
ஜூன் 1991 இல், சிறிலங்காவின் அப்போதைய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன, விடுதலைப் புலிகளை முற்றிலுமாக எதிர்க்க ஒட்டுமொத்த உத்தியை கோடிட்டுக் காட்டும் ஒரு ஆவணத்தை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தாக குறித்த நூல் விளக்கியுள்ளது.
மேஜர் ஜெனரல் வைத்தியரத்னவின் முன்மொழிவில் செய்யப்பட்ட பரிந்துரைகளில் ஒன்று, இராணுவத்தை விட கடற்படையை விரிவுபடுத்த வேண்டும் என்பதாகும்.
விடுதலைப்புலிகள் கடல் வழியாக ஆயுத விநியோகங்களைச் சார்ந்து இருக்கிறார்கள், அத்தகைய பொருட்களைத் துண்டிப்பது இராணுவத்தால் நிலத்தில் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக எதிர்த்துப் போராட உதவும் என்பது அவரது வாதம்.
சிறிலங்கா இராணுவம்
ஆனால் இதனை சிறிலங்கா இராணுவத்தினால் அப்போது செயற்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்றாக காணப்பட்டது.
இந்த மதிப்பீட்டை மேற்கொள்ள அமெரிக்க பசிபிக் கட்டளையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு இலங்கையில் 2002 ஆம் ஆண்டு ரணில் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது.
2002 ஆம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிக்கை, மற்றவற்றுடன், விடுதலைப் புலிகளின் 'ஈர்ப்பு மையம்' கடல் வழியாக ஆயுதங்களை மீண்டும் வழங்குவதாகும் என்றும், இந்த ஓட்டத்தை நிறுத்துவது மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் அவர்களது கூறியது.
கடற்படை நடவடிக்கைகள் கடலோர நீரில் இருந்து நடுக்கடல் கால்வாய்களுக்கு ஆயுத பரிமாற்ற புள்ளிகளைத் தள்ளிவிட்டன என்றும், இலங்கை நீண்ட தூர கண்காணிப்பு திறன்களையும், அத்தகைய பரிமாற்றங்களை நிறுத்தும் திறன் கொண்ட கடல்சார் இடைமறிப்பு கப்பல்களையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டது.
இராணுவத்தின் அச்சம்
2003 ஆம் ஆண்டு, கடற்படையின் கிழக்குத் தளபதியாக கரண்ணகொட நியமிக்கப்பட்டபோது, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் புதிய முகாம்களை அமைப்பதைத் தடை செய்யும் பிரிவு இருந்தபோதிலும், உண்மையில், திருகோணமலை துறைமுகத்தின் முகத்துவாரத்திற்கு சற்று தெற்கே விடுலைப்புலிகள் புதிய முகாம்களை அமைத்து வருவதான தகவலை பெற்றதாக கூறப்படுகிறது.
திருகோணமலை துறைமுகத்தை விடுதலைப்புலிகள் முற்றுகையிட்டால், யாழ்ப்பாணத்திற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பொருட்கள் மற்றும் துருப்புக்களின் நகர்வுகள் நிறுத்தப்படும் என்றும் சிறிலங்கா இராணுவம் அச்சம் கொண்டுள்ளது.
இதன் விளைவாகப் போரில் மிகவும் வித்தியாசமான 'திருப்புமுனை' ஏற்படும் என்றும் கரண்ணகொட அன்றைய அரசியல் அதிகாரிகளை எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உண்மையில், அத்தகைய சாத்தியக்கூறு, முன்னர் குறிப்பிடப்பட்ட இலங்கை குறித்த அமெரிக்க பாதுகாப்புத் துறையின் 2002 அறிக்கையிலும் கூட தீவிரமாகக் கருதப்பட்ட ஒரு விஷயமாக கருதப்படுவதாக குறித்த புத்தகம் விவரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
