அடம்பிடிக்கும் புடின் - இறந்த முடிவுகள் : எச்சரிக்கும் உக்ரைன் ஜனாதிபதி
ரஷ்யாவுடனான எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலும் கியேவும் இடம்பெற வேண்டும் என்று ஐரோப்பிய நட்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அலஸ்காவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை அதிகாரி
இந்த அறிவிப்பை ட்ரம்ப் தனது சமூக ஊடகங்களிலும் உறுதிப்படுத்தியிருந்தார்.
அத்துடன் இந்த சந்திப்பில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே பிரதேசங்களை "பரிமாற்றம்" செய்வது குறித்து விவாதிக்கப்படலாம் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவுடனான எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலும் உக்ரைனின் பங்கேற்பு அவசியம் என ஐரோப்பிய நட்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கு முன்னோடியாகவே இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, போலந்து, பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையகத் தலைவர்கள் கூட்டாக இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.
இறந்த முடிவுகளுக்கு சமம்
உக்ரைன் ஜனாதிபதியும் பங்கேற்கும் வகையில் சந்திப்பை நடத்துவதற்கு ட்ரம்ப் தயாராகவே உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இப்போதைக்கு, ரஸ்ய ஜனாதிபதி ஆரம்பத்தில் கோரியபடி, அது ட்ரம்ப் - புடின் உச்சி மாநாடாகவே நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
புட்டினை பொறுத்த வரையில், செலேன்ஸ்கியை நேரடியாக சந்திக்க விரும்பாமையே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கியேவ் இல்லாத எந்தவொரு ஒப்பந்தமும் இறந்த முடிவுகளுக்கு சமம் என்று உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
