மீண்டும் மீண்டும் நிலநடுக்கத்தால் அதிரும் துருக்கி - அச்சத்தில் மக்கள்
புதிய இணைப்பு
துருக்கியில் மீண்டும் இன்று காலை 7.25 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொடர் அதிர்வுகள் காரணமாக சேதமடைந்த கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம் என்று அந்நாட்டு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
துருக்கியின் (Turkey) வடமேற்கு மாகாணமான பாலிகேசிரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
6.1 ரிக்டர் அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் நேற்று (10) இரவு ஏற்பட்டுள்ளது.
சிந்திர்கி நகரத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம், 16 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இஸ்தான்புல்லின் (Istanbul) வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம்
நிலநடுக்கத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளில் எவரேனும் சிக்கியிருந்தால் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீட்பு குழுவினர் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உட்பட பல பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளதால், சேதமடைந்த கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம் என்று அந்நாட்டு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
