உற்று நோக்கும் உலகம் - கோட்டை நீதிமன்றுக்கு வருகைத்தரவுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர்?
ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணையை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் நீதிமன்றத்திற்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில சமூக ஊடக கணக்குகள் இதனை மேற்கோள் காட்டியுள்ளன.
எனினும் இது தொடர்பிலான உத்தியோகப்பூர்வ தகவல்கள் எனதனையும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் வெளியிடவில்லை.
எனினும் இன்று எதிர்க்கட்சி தலைவர் பிரித்தானிய உயர் ஸ்தானிகருடன் விசேட சந்திப்பை மேற்கொண்டுள்ள பின்னணியில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எதிரான வழக்கு இன்று (26) பிற்பகல் 1.00 மணிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) அவரது உடல்நிலை காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, நீதிமன்றம் தெரிவித்தால், இன்று (26) நடைபெறும் நடவடிக்கைகளில் அவரை zoom மூலம் இணைக்க சிறைச்சாலைகள் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

