அதிபர் தேர்தலை ஒத்திவைக்க ரணில் முயற்சிக்கவில்லை : ருவான் விஜேவர்தன பகிரங்கம்
சிறிலங்கா அதிபர் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளமாட்டார் என ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணிலின் அனுசரணையில் தேர்தலை காலம் தாழ்த்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் பின்னணியில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை ரணில் விக்ரமசிங்க, அதிபர் தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிப்பதாக வெளிக்காட்டிக் கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை
மேலும் அதிபர் ரணில் அரசியல் சாசனத்தை மதிக்கும் ஒர் அரசியல்வாதி எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை, வெற்றியீட்டச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) ஏனைய கட்சிகளும் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |