டயானா கமகேவிற்கு தக்க பதிலடி கொடுத்த அதிபர் ரணில்
Ranil Wickremesinghe
Diana Gamage
By Sumithiran
போயா தினத்தில் சுற்றுலா ஹோட்டல்களில் மாத்திரம் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் அதிபர் ரணில் தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
போயா தினத்தில் மதுபானம் விற்பனை
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு போயா தினங்களில் மதுபானம் கிடைக்க வழி இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், போயா தினத்தில் சுற்றுலா விடுதிகளில் மட்டும் மதுபானம் வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது இல்லாத பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என அதிபர் ரணில் பதிலளித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்