மொட்டுவால் தெரிவுசெய்யப்பட்ட எட்டாவது ஜனாதிபதி ரணில் GOV.UK அறிக்கையால் சிக்கினார்

Ranil Wickremesinghe Sri Lanka United Kingdom
By Dharu Aug 19, 2026 10:31 AM GMT
Report

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் தனது தனிப்பட்ட பிரித்தானிய விஜயத்திற்காக மக்களின் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான நீதிமன்ற வழக்குகள் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.

GOV.UK இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிக்கையினை மேற்கோள்கட்டி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடும் ரணிலுக்கு எதிராக திரும்பும் ஒரு சட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது.

GOV.UK வெளியிட்ட இந்த அறிக்கையில் இராஜதந்திர முறையில் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு வருகைதந்ததாக எந்த விதமான தரவுகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

தெரிந்து கொண்டே ஆபத்தில் சிக்கிய ரணில் : அம்பலமான இரகசிய திட்டம்

தெரிந்து கொண்டே ஆபத்தில் சிக்கிய ரணில் : அம்பலமான இரகசிய திட்டம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு

இந்நிலையிலேயே சமூக செயற்பாட்டாளரான ஒஷால ஹேரத்தால் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மொட்டுவால் தெரிவுசெய்யப்பட்ட எட்டாவது ஜனாதிபதி ரணில் GOV.UK அறிக்கையால் சிக்கினார் | Ranil Gets Caught Up In Gov Uk Report

கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ரணில் விக்ரமசிங்க பிரேதனியாவுக்கு மேற்கொண்ட விஜயம், ஓர் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல என்பது அந்த அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

இந்த குற்றச்சாட்டானது ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு முன்னதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்து.

அது தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்டன. எனினும், தற்போதைய பிரதம நீதியரசர் ஓய்வுபெறும் வரை இந்த வழக்கை வேண்டுமென்றே காலதாமதம் செய்ய சட்டமா அதிபர் முயல்வதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் (Trial-at-Bar) முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இது குறித்து நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையே வழக்குகளின் தாமதத்திற்கு முதன்மைக் காரணம் என்றும், நீதித்துறையின் சுயாதீனமான செயல்பாடுகளில் அரசாங்கம் தலையிட முடியாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் : நீதிமன்றில் கடும் வாக்குவாதம்... பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் : நீதிமன்றில் கடும் வாக்குவாதம்... பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சட்டமாதிபர் திணைக்களம்

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, "ஜனநாயகத்தைச் சீர்குலைத்துள்ள ரணில் விக்ரமசிங்க, நாட்டின் இந்த பாரிய குற்றத்திற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும்" என மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார்.

மொட்டுவால் தெரிவுசெய்யப்பட்ட எட்டாவது ஜனாதிபதி ரணில் GOV.UK அறிக்கையால் சிக்கினார் | Ranil Gets Caught Up In Gov Uk Report

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, குற்றப்புலனாய்வு திணைக்களம் பிரித்தானியாவுக்கு சென்று தேவையான தகவல்களை திரட்டி வந்துள்ளனர்.

அத்துடன் சட்டமாதிபர் திணைக்களத்துக்கு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளனர். வழக்கு குறித்த அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ள. எனவே மேல்நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.

மேலும் இதனை விசாரிக்க மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வை அமைக்க பரிந்துரைகளும் மேற்கொள்ளப்பட்டது.

இருந்தும் இந்த அணைத்து ஆவணங்களும் சட்டமா அதிபரின் மேசைக்கு சென்று பல மாதங்கள் கடந்த போதும், சட்டமா அதிபர் மௌனம் காப்பது சரியானதா?

சட்டமா அதிபருக்கு இந்த வழக்கை தொடர்வதில் ஏதேனும் குழப்பம் உள்ளதா?

ரணிலின் சட்டத்தரணி நீதிமன்றில் முன்வைத்த உருக்கமான கோரிக்கை!

ரணிலின் சட்டத்தரணி நீதிமன்றில் முன்வைத்த உருக்கமான கோரிக்கை!

மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை 

ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் சட்டமா அதிபருக்கு உள்ள பிரச்சினை என்ன?

மொட்டுவால் தெரிவுசெய்யப்பட்ட எட்டாவது ஜனாதிபதி ரணில் GOV.UK அறிக்கையால் சிக்கினார் | Ranil Gets Caught Up In Gov Uk Report

பிரதம நீடியரசரும், சட்டமா அதிபரும் முறையே டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஓஓய்வு பெறவுள்ளனர். இந்த குறுகிய காலத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் வேறு எதனையும் தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு திட்டம் உள்ளதா?

சட்டமா அதிபரே, உங்களுக்கு முன்னாள் ரணில் குறித்த விடயத்தில் சாய்வு நினை இருக்கின்றது என்ற கருத்து சமூகத்தில் பரவி உள்ளது.

அது என்னவாக இருந்தாலும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நம்பகத்தன்மைக்கு இது ஏற்றது அல்ல.

தற்போது ரணில், சஜித் மற்றும் கம்பன்பிலவை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க திட்டமிடுகிறார். இந்த கதாபாத்திரம் மற்றும் தூண்டுதலில் ரணில் இருப்பது தெளிவாகிறது." என தெரிவித்துள்ளார்.

மகிந்தவையும் விமர்சிக்கும் நாமல் ராஜபக்ச...

மகிந்தவையும் விமர்சிக்கும் நாமல் ராஜபக்ச...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022