ரணிலின் ஆட்டம் ஆரம்பம் - மீண்டும் நியமிக்கப்பட்ட ஏக்கநாயக்க (படங்கள்)
பிரதமர் ரணிலின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (12) கொழும்பு அரச தலைவர் மாளிகையில் அரச தலைவரின் செயலாளர் காமினி செனரத்திடம் இருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஏக்கநாயக்க இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். 2015-2019 காலப்பகுதியில் மூன்று தடவைகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக கடமையாற்றிய இவர் நான்காவது தடவையாக அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏக்கநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். மற்றும் அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவர் தனது 30 வருட நிர்வாக சேவையின் போது இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமுர்த்தி, வீடமைப்பு, கைத்தொழில், வெளிவிவகார மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளிலும் மலேசியா மற்றும் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயங்களிலும் பணியாற்றியுள்ளார்.
