ரணிலிடம் உள்ள அரச வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

Ranil Wickremesinghe Government Of Sri Lanka Sagala Ratnayaka
By Sathangani Oct 21, 2024 03:58 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) அரசாங்க வாகனங்களில் அதிகமானவை மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் 11 வாகனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை என ரணிலின் முன்னாள் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவினரே தங்களின் கடமையை செய்வதற்கு சில உபகரணங்களை அரசாங்கத்திடம் கேட்டிருக்கிறது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

புதிய ஜனநாயக முன்னணி நேற்று (20) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சாகல ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய உயிர்த்த ஞாயிறு அறிக்கை - அநுரவின் அதிரடி உத்தரவு

சர்ச்சைக்குரிய உயிர்த்த ஞாயிறு அறிக்கை - அநுரவின் அதிரடி உத்தரவு

அரசாங்கத்தின் 11 வாகனங்கள்

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ரணில் விக்ரமசிங்கவிடம் அரசாங்கத்தின் 11 வாகனங்கள் இருப்பதாகவும் அதனை உடனடியாக கையளிக்குமாறு தெரிவித்து கடிதம் அனுப்பி இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவினரிடம் கேட்டபோது, அவ்வாறு எந்த கடிதமும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்கள்.

ரணிலிடம் உள்ள அரச வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல் | Ranil Has 11 Vehicles Is Not True Sagala Ratnayaka

ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த வாகனங்களில் அதிகமான வாகனங்களை மீள கையளித்திருக்கிறோம். இன்னும் சில வாகனங்களே இருக்கின்றன.

அவை முன்னாள் ஜனாதிபதி என்றவகையில், அரசியலமைப்பின் மூலம் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய பாதுகாப்புக்கு தேவையான வாகனங்களே இருக்கின்றன.

பொருட்களின் விலை தொடர்பில் அநுர தலைமையில் விசேட கலந்துரையாடல்

பொருட்களின் விலை தொடர்பில் அநுர தலைமையில் விசேட கலந்துரையாடல்

தேசிய மக்கள் சக்தி பிரசாரம் 

அதேநேரம் ரணில் விக்ரமசிங்க 30 குடைகளை கேட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தியினர் (NPP) பிரசாரம் செய்து வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை.

ரணிலிடம் உள்ள அரச வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல் | Ranil Has 11 Vehicles Is Not True Sagala Ratnayaka

ரணில் விக்ரமசிங்க எதனையும் கேட்டதில்லை. மாறாக ரணில் விக்ரமசிங்கவுக்கு பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு பிரிவினர் தங்களின் கடமையை செய்வதற்கு சில உபகரணங்களை அரசாங்கத்திடம் கேட்டிருக்கிறது.

அது பாதுகாப்பு பிரிவினர் கேட்டிருக்கிறார்களே தவிர ரணில் விக்ரமசிங்க எதனையும் கேட்டதில்லை.

அத்துடன் தேசிய பாதுகாப்பு தொடர்பான முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலாேசகர் என்றவகையில், அந்த பதவிக்குரிய கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணங்கள் எனக்கு வழங்கப்பட்டன.

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவை எதனையும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. எனக்கு வழங்கப்பட்டிருந்த வாகனத்தையும் அப்போதே திருப்பிக்கொடுத்தேன்“ என தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024: 400 ஐ தாண்டிய தேர்தல் முறைப்பாடுகள்!

நாடாளுமன்றத் தேர்தல் 2024: 400 ஐ தாண்டிய தேர்தல் முறைப்பாடுகள்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026