மொட்டு கட்சியின் அதிகாரத்தை ரணில் கைப்பற்றியுள்ளார்: உதய கம்மன்பில சாடல்
மொட்டு கட்சியின் அதிகாரத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க கைப்பற்றியுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில(Udaya Kammanpila) தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவின் கருத்துக்களை ரணில் கண்டு கொள்வதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்திக்கொள்ள மொட்டு கட்சி விரும்பிய போதிலும், அதனை அதிபர் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
‘‘முதலில் அதிபர் தேர்தலே நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் ரணில் விக்ரமசிங்க இருக்கின்றார்.அதிபர் தேர்தலில் அடையும் தோல்வி மொட்டு கட்சியின் நாடாளுமன்ற தேர்தலை பாதிக்கும் என்பதனால் இவ்வாறு முதலில் அதிபர் தேர்தலை நடத்த வேண்டாம் என மொட்டு கட்சி கோருகிறது.
எனினும் முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது நாட்டுக்கு செய்யும் பாதகச் செயலாகவே கருதப்பட வேண்டும் அடிக்கடி அதிபருக்கும் பசிலுக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்படுவதன் மூலம் மொட்டுக் கட்சியின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பது அம்பலமாகியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் மொட்டு கட்சியின் பத்து பேருக்கு அமைச்சு பதவி வழங்காவிட்டால் எதிர்க்கட்சியில் அமர்வதாக எச்சரிக்க விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அந்த பத்து பேருக்கும் அமைச்சுப் பதவி வழங்கவில்லை. எனினும் மொட்டு கட்சியினர் எதிர்க்கட்சியில் அமரவில்லை.” என்றார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை காண ஐபிசி தமிழின் மதியநேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |