ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் தீக்கிரை (காணொளி)
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமரது தனிப்பட்ட இல்லத்திற்கே ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நெருக்கடி நிலை காரணமாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் அமைந்துள்ள பகுதியை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் கண்ணீர்ப்புகை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடும் பதற்ற நிலை நீடித்து வருகிறது.
Protesters have broken into the private residence of Prime Minister Ranil Wickremesinghe and have set it on fire - PM's office pic.twitter.com/yXGFvHbMKt
— Azzam Ameen (@AzzamAmeen) July 9, 2022
PM Ranil Wickramasinghe's residence is on fire. #ProtestLK #SriLankaProtests pic.twitter.com/nKiBEqFCxV
— Marlon Ariyasinghe (@exfrotezter) July 9, 2022
இந்த நிலையில், பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்தமை கண்டிக்கத்தக்கது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
I condemn outright the burning of the private residence of @RW_UNP Violence will not solve anything and is counter-productive. I have had differences of opinion with the PM since he took that post, but this cannot be condoned in anyway. Please end the violence now.
— M A Sumanthiran (@MASumanthiran) July 9, 2022
தனது டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர், வன்முறைகள் எதற்கும் தீர்வாகாது, அவை எதிர்விளைவுகளையே தரும் தரும் எனக் கூறியுள்ளார்.

