அதிபர் வேட்பாளர் ரணில் : அறிவித்தது ஐக்கிய தேசிய கட்சி
எதிர்வரும் அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க நிரந்தரமாக நிறுத்தப்படுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் தற்போதுள்ள தலைவர்களில் சர்வதேச சமூகம் அங்கீகரித்து சந்தேகத்திற்கு இடமின்றி தீர்மானங்களை மேற்கொள்ளும் அனுபவமுள்ள ஒரேயொரு தலைவர் அவர்தான் எனவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
ரணில் எடுத்த தீர்மானங்களால்
அதிபர் எடுத்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தியதால் 25 வருடங்களின் பின்னர் நாட்டின் தேசிய வருமானம் அதிகரித்துள்ளதாகவும் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில்
நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் சிலர் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |