அதிகரிக்கும் பதற்றம் : இந்தியாவை தாக்க தயார் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள்
இந்தியாவை(india) தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளதாக பாகிஸ்தான்(pakistan) அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி தெரிவித்துள்ளமை இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
அத்துடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்நம் இரத்து
சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்த நிலையிலேயே பாகிஸ்தான் அமைச்சர் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.
ஏவுகணைகள் வெறும் கண்காட்சிக்கானது அல்ல
‘ பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தினால், அவர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள இராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் வெறும் கண்காட்சிக்கானது அல்ல.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 130 அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை எங்கு உள்ளன என்று யாருக்கும் தெரியாது. இந்த அணு ஆயுதங்கள் அனைத்தும் இந்தியாவை மட்டுமே குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
