பிரித்தானியாவில் கருணா உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட தடை: அடுத்து சிக்கவுள்ள முக்கிய புள்ளிகள்
சிறிலங்கா (Sri Lanka) அரசின் முன்னாள் மூன்று இராணுவத் தளபதிகள் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா உள்ளிட்டவர்களுக்கு பிரித்தானியா (United Kingdom) விதித்த தடை போன்று போர் குற்றங்களில் ஈடுபட்ட மேலும் சிலருக்கு இவ்வாறான தடைகள் விதிக்கப்படலாம் என பிரித்தானிய மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில், இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான ஜெனரல் சவேந்திர டி சில்வா மற்றும் ஜகத் ஜயசூரிய, கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு கடந்த மார்ச் மாதம் பிரித்தானியா தடையை விதித்தது.
இலங்கையில், இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என குறித்த நால்வர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டே இந்த தடை விதிக்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில், இந்த தடைக்கு பின்னால் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களை தகுந்த ஆதாரங்களுடன் கண்டறிந்து அவர்களுக்கும் இது போன்ற தடை விதிக்கப்பட்லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை தொடர்பில் பிரித்தானியாவின் அடுத்த கட்ட நகர்வுகள் என்ன என்பது தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் “ஊடறுப்பு” நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
