தேர்தலின்றி ஆட்சி நடத்த ரணிலுக்கு அதிகாரம் : மீண்டும் வலுக்கும் கோரிக்கை
Palitha Range Bandara
Ranil Wickremesinghe
Election
By Sumithiran
பெரும் நெருக்கடியில் சிக்கிய நாட்டைக் காப்பாற்றிய ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe)வுக்கு தேர்தலின்றி நாட்டை மேலும் ஆட்சி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கருத்து இருப்பதாக அதிபர் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய(saman ratnapriya) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார(palitha range pandara)வினால் இந்த யோசனையும் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தேர்தலை நடத்த இந்த தருணம் வாய்ப்பில்லை
பொதுச் செயலாளரின் யோசனை சரியான யோசனை என்றும் தேர்தலை நடத்த இந்த தருணம் வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி