கியூபாவிற்கு புறப்பட்ட ரணில் விக்ரமசிங்க
Ranil Wickremesinghe
President of Sri lanka
China
Cuba
By Sathangani
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள "ஜீ 77+ சீனா" அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இன்று (13) அதிகாலை 3.15 அளவில் நாட்டில் இருந்து புறப்பட்டார்.
"தற்போதைய அபிவிருத்தி சவால்களுக்கு மத்தியில், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் வகிபாகம்" என்ற தொனிப்பொருளில் நாளை 14 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை மாநாடு நடைபெறவுள்ளது.
கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கனலின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ரணில் விக்ரமசிங்க உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
ரணில் உரைநிகழ்த்தவுள்ளார்
இதேவேளை குறித்த மாநாட்டில் அதிபர் ரணில் விக்ரமசிங்க உரை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜீ77+சீனா தலைவர்கள் உச்சிமாநாடு ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட 134 வளரும் நாடுகளின் மிகப்பெரிய அரசுகளுக்கிடையேயான கூட்டணியைக் குறிப்பதாகும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்