புலம்பெயர் தமிழர்களை சந்திக்கும் ரணில்
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
எந்தவொரு சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கும் பதிலாக 'உள்நாட்டு பொறிமுறை' தொடர்பாக தமிழ் புலம்பெயர் தலைவர்களுடன் கலந்துரையாடுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
நீதி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இதனை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக விரைவில் புலம்பெயர்ந்த தமிழ் தலைவர்களுடன் இலங்கை அதிபர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த விவாதம் வெற்றியடையும் பட்சத்தில், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் விஜயதாச கூறினார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
3ம் ஆண்டு நினைவஞ்சலி