மிக முக்கிய நாடுகளின் இராஜதந்திரிகளை திடீரென சந்தித்த ரணில்
Ranil Wickremesinghe
Australia
Japan Sri Lanka Relationship
India
By Vanan
அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று இலங்கையிலுள்ள மிக முக்கிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை திடீரென சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு
பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இராஜதந்திர பிரதிநிதிகளுக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்