சர்வதேச மட்டத்தில் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் - அதிபர் பதவியை பறிக்க திட்டமா..!
தொடர் போராட்டங்களினால் சிறிலங்கா பெரும் நெருக்கடிகளையும் சர்வதேச மட்டத்தில் அழுத்தங்களையுமே சந்தித்து வருகின்றது.
பொருளாதார நெருக்கடி என்பது சிறிலங்காவில் கோராத் தாண்டவமே ஆடி வருகின்றது. விலையேற்றங்கள் என்பது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்று கொண்டு இருக்கின்றது. எரிபொருள் விலை குறைப்பில் எதோ மாற்றம் ஏற்படும் என பார்த்தால் விலைக் குறைப்பு என்பது வெறும் கண்துடைப்பாகவே போய்விட்டது எனலாம்.
இரண்டரை ஆண்டுகளுக்கு தனது அதிபர் ஆசனத்தினை தக்க வைக்க வேண்டும் என்பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியாகவே உள்ளார். அதன் பின்னர மீண்டும் அதிபர் தேர்தலில் களமிற்கும் நோக்கமும் அவரிடம் இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அதிபர் பதவியில் நீடிக்க மாட்டார். விரைவில் பதவி விலகுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் அண்மையில் கூறியிருந்தார்.
இவை ஒருபக்கம் இருக்கையில் இன்றைய தினம் மீண்டும் தென்னிலங்கையில் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் “தேசிய எதிர்ப்பு தினம்” எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயக போராட்டக்காரர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்தே இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்கு முறை நிறுத்தப்பட வேண்டும் - கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் போன்ற விடயங்ளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தென்னிலங்கையில் வெடித்துள்ள போராட்டம் - சர்வதேச மட்டத்தில் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் - அதிபர் பதவியை பறிக்கவும் திட்டமா..?
இவைகள் தொடர்பில் ஆராய்கிறது இன்றைய உண்மையின் அலசல் நிகழ்ச்சி,