அரசிற்கு ஆதரவாக பிரசாரம் செய்யுங்கள்! ரணில் உத்தரவு
Ranil Wickremesinghe
By pavan
தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு குறைந்துவிட்டது. ஐக்கிய மக்கள் சக்தியிலும் எழுச்சி இல்லை. எனவே, அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை நாம் மக்கள் மத்தியில் தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய கையோடு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுடன் அதிபர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார் என தெரியவருகின்றது.
இதற்கு பதிலளித்த மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம், உங்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். எதுவாக இருந்தாலும் எமது கட்சிக்கு ஒரு தடவை அறிவித்துவிடுங்கள் என கோரிக்கை விடுத்தார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்
