ரணிலுக்கும் பச்சைக்கொடி காட்டியது சீனா

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka China
By Beulah May 31, 2023 06:34 AM GMT
Report

சிறிலங்காவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங் வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டுவதாக சீன துணை அமைச்சர் நேற்று (30) அதிபர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் அலுவலகத்தில் சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான காலப்பகுதியில் சிறிலங்காவிற்கு சீனா வழங்கிய அசைக்க முடியாத ஆதரவிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க, சீன துணை அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக அதிபர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல்

ரணிலுக்கும் பச்சைக்கொடி காட்டியது சீனா | Chinese Foreign Affairs Vice Minister Meets Ranil

மேலும், சிறிலங்காவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்வதில் சீனாவின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய துணை அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய சீனா ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அதிபர் ஊடக பிரிவு, சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங்கின் சிறிலங்கா விஜயம் மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தச் சந்திப்பில், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும், பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, அதிபரின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் கலந்துகொண்டதாக அதிபர் ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த காலத்தில் சீனா இலங்கைக்கு பேராதரவு வழங்கியதுடன், பெருமளவு கடன் வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்திருந்தது.

சீன ஆதரவுடன் தேவையற்ற அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டதால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தததாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்