ரணிலுக்கு அதிகாரம் இல்லை : உண்மையை போட்டுடைத்தார் பீரிஸ்
அரசியலமைப்பு சபையின் சுயாதீனத்தை சவால் செய்ய அதிபர் ரணிலுக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை எனவும், சுயாதீன ஆணைக்குழுக்கள் தற்போது பெயரளவு ஆணைக்குழுக்களாக மாறியுள்ளதாகவும் சுதந்திர மக்கள் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் இன்று (4) தெரிவித்தார்.
உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதில் அரசியல் நிர்ணய சபைக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும், ஆனால் தற்போது அது நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் இருப்பதாக பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துமீறி நுழையும் நிறைவேற்று அதிகாரம்
தற்போதைய நிறைவேற்று அதிகாரம் சுயாதீன நிறுவனங்களுக்குள் அத்துமீறி நுழைவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தை ஆக்கிரமிக்கும் முயற்சி
அதிபருக்கும் அரசியலமைப்பு சபைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர், அதிபரின் நாடாளுமன்றத்தை ஆக்கிரமிக்கும் முயற்சி சட்டவிரோதமானது எனவும் தற்போதைய அமைச்சரவை பெயரளவில் மாற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நாவலவில் உள்ள சுதந்திர மக்கள் பேரவையின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |