அந்நியனாகவும் அம்பியாகவும் மாறும் ரணில்! கிண்டலடித்த சாணக்கியன்
அதிகாரம் இருக்கும் போது அதிபர் ரணில் விக்ரமசிங்க அந்நியனாக மாறுவதுடன் ஆட்சியதிகாரம் இல்லாத காலத்தில் அம்பியாக மாறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் உள்ள ஹேமியோபதி வைத்தியசாலைக்கு தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
அம்பியாக மாறுவார்
ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அவருடைய சிந்தனைகள், ஜனநாயகத்தை மதிக்கவேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் ஊடக சுதந்திரம் வழங்க வேண்டும் என இருந்தது.
ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கும் போது அதனை செய்வதற்கு தவறுகிறார், குறிப்பாக நிகழ்நிலை காப்பு சட்டம் மூலம் அனைத்து ஊடகங்களின் செயற்பாடுகளையும் முடக்கும் வகையில் செயற்பட்டு வருகிறார்.
ஆட்சி அதிகாரம் கிடைத்தவுடன் அந்நியனாக மாறியிருக்கும் அவர் ஆட்சி அதிகாரம் போன பின்பு அம்பியாக மாறுவார் என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்