கடத்தல்காரர்களுக்கு 90,000 கோடி நன்கொடை - சத்தமில்லாமல் அரங்கேறும் பாரிய மோசடி..!
மாதாந்த நிலையான சம்பளம் பெறுவோர் உட்பட மக்கள் மீது வரம்பற்ற வரிச்சுமையை திணித்து பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச கூட்டணி அரசாங்கம் மற்றும் அவர்களின் கூட்டுக் கடத்தல்காரர்களுக்கு 90,000 கோடி ரூபாவுக்கு வரிச் சலுகை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
2022ஆம் ஆண்டு தொடர்பான அரசின் பொதுக் கணக்குக் குழு நடத்திய விசாரணையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலின்படி, 31.12.2022 நிலவரப்படி ரூ.90,434 கோடி நிலுவைத் தொகை வசூலிக்கப்படவில்லை என்றும், மேற்படி பணத்தை வசூலிக்க சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை என தெரியவந்துள்ளது.
60,000 கோடி ரூபாய் வரிச்சலுகை

இத்தகவல்களின் அடிப்படையில், கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தவுடன் கடத்தல்காரர்களுக்கு சுமார் 60,000 கோடி ரூபாய் வரிச்சலுகைகள் வழங்கப்பட்டுள்ளமை வெளிவந்துள்ளது.
அத்தோடு, ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியிலும் அது சத்தமில்லாமல் நடைபெற்று வருவதாக இத்தகவல்கள் மூலமாக தெரியவந்துள்ளது.