ரணிலுடனான பேச்சில் மலையக மக்களின் அபிலாசைகளும் உள்ளீர்ப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் நாளை நடைபெறும் தேசிய பிரச்சினைக்கான தீர்வு பேச்சுக்களில் மலையக மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான காலம் உதயமாகவிட்டதை எடுத்துரைப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.
மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கத்தின் யோசனைகளை பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இதனைக் கூறியுள்ளார்.
இடைக்கால அரசியலமைப்பு
இதேவேளை தென்னாபிரிக்காவை முன்மாதிரியாகக் கொண்டு இடைக்கால அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பான யோசனையை மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம், தனது யோசனையாக முன்வைத்துள்ளது.
மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கத்தின் யோசனைகள் அடங்கிய ஆவணமானது அதன் ஏற்பாட்டாளர் விக்ரர் ஐவன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா ஆகியோரால் இன்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கத்தின் யோசனை
அந்த வகையில் மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கத்தின் யோசனைகள் அதன் அழைப்பாளர் விக்ரர் ஐவனால் இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா
