பதவி விலக்க கோரிய ஆளும் தரப்பு - ரணில் கொடுத்த பதில்
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
Public Utilities Commission of Sri Lanka
By Sumithiran
பதவியில் இருந்து நீக்குங்கள்
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு நேற்று (04) இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்ட தவறான கருத்துக்களால் அரசாங்கமும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரணில் கொடுத்த விளக்கம்
எனவே அவரை உடனடியாக பதவி நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச தலைவர் மற்றும் பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பமிடப்பட்ட கடிதத்தை கையளித்தால் அவரை பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
