அடுத்த வருடத்தில் சுமூகமான நிலை : வெளிவந்த ரணிலின் திட்டம்

Ranil Wickremesinghe Government Of Sri Lanka Budget 2024 - sri lanka
By Vanan Nov 16, 2023 12:57 PM GMT
Report

உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் பொருட்களின் விலைகளை குறைப்பதன் ஊடாக நாட்டு மக்களுக்கு சுமூகமான சூழலொன்றை உருவாக்குவதே அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என பொதுநிர்வாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.

சம்பள அதிகரிப்பினால் மாத்திரம் அதற்கு தீர்வு காண முடியாதெனவும், அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் சுமூகமான நிலைமை உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அதிபர் ஊடக மையத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

புலம்பெயர் இலங்கையர்களுக்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை!

புலம்பெயர் இலங்கையர்களுக்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை!

வரவு செலவுத் திட்டம் பற்றிய விமர்சனம்

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், “மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் புதிய வருமான வழிமுறைகளை உருவாக்க கூடியதுமான வரவு செலவுத் திட்டம் ஒன்றும் முன்மொழியப்பட்டுள்ளது. அது தொடர்பிலான பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.

அடுத்த வருடத்தில் சுமூகமான நிலை : வெளிவந்த ரணிலின் திட்டம் | Ranil S Aim Is To Create An Environment Sri Lanka

குறிப்பாக பிரதமரின் கீழுள்ள பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க அரசாங்க ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சம்பள அதிகரிப்பினால் மாத்திரம் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியாது.

கொவிட் பரவல் காலத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு சிறிதளவும் சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை என்பதாலேயே தற்போது சம்பள அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு கல்வித் திட்டத்தை விஸ்தரிக்கும் நோக்கில் 4 புதிய பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, தடைப்பட்டு கிடக்கும் வீதி நிர்மாண பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்களை மறைத்துவிட்டு எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பினரால் கிரிக்கெட் தொடர்பிலான விடயங்கள் குறித்த கலந்துரையாடல்கள் ஏற்படுத்தப்படுகின்றமை கவலைக்குரியது.

மௌலவியின் சர்ச்சைக் கருத்து! காவல்நிலையத்தில் முறைப்பாடு

மௌலவியின் சர்ச்சைக் கருத்து! காவல்நிலையத்தில் முறைப்பாடு

அரசாங்கத்தை வழிநடத்துவது இலகுவல்ல

இருப்பினும் அரசாங்க தரப்பினர் அந்தத் தவறுகளைச் செய்யவில்லை. அதேபோல், அரசாங்கத்தின் வரி வருமானம் பெப்ரவரி மாதத்திலேயே சேகரிக்கப்படும் என்பதாலேயே பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களின் அரச வருமானத்தை கொண்டு ஏப்ரல் மாத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்தில் சுமூகமான நிலை : வெளிவந்த ரணிலின் திட்டம் | Ranil S Aim Is To Create An Environment Sri Lanka

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு மேலதிகமாக நாட்டின் ஏனைய மக்களுக்கும் நிவாரணம் கிடைக்க வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக அரசாங்கம் வழங்கும் சலுகைகளை வியாபாரச் சமூகம் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.

அத்தோடு இம்முறை முன்மொழியப்பட்ட வரவு செலவு திட்டத்தின் ஊடாக அடுத்த வருடத்தின் பெப்ரவரி, மார்ச் மாதமளவில் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்பதே அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் எதிர்கட்சியில் இருப்போர் அளவற்ற சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என்று கனவு காண முடியும். ஆனால் அரசாங்கத்தை வழிநடத்திச் செல்வது கனவு காண்பதைப் போன்று இலகுவான விடயமல்ல." என்றார். 

உலகையே உலுக்கும் 4 வயது சிறுவனின் அழுகுரல் : இஸ்ரேல் ஹமாஸ் போரின் மறுபக்கம்

உலகையே உலுக்கும் 4 வயது சிறுவனின் அழுகுரல் : இஸ்ரேல் ஹமாஸ் போரின் மறுபக்கம்

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026