நாட்டின் முன்னேற்றத்திற்கு இதுவே அவசியம்: ரணில் வலியுறுத்து

Ranil Wickremesinghe Sri Lanka Economy of Sri Lanka
By Raghav Jul 15, 2024 06:38 PM GMT
Report

சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கலாச்சாரம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமானது என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

அதிபர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பின் போதே அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை குறைத்து மதிப்பிட முடியாது எனத் தெரிவித்த அதிபர், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பாடசாலை அதிபர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு

பாடசாலை அதிபர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு

சர்வதேச நாணய நிதியம்

மேலும் கருத்து தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, ”கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டது. நாட்டைப் பற்றி சிந்தித்து ஒரு குழு உருவானது.

 அவர்கள் சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி செயல்பட்டனர். எனவே, எந்தக் கட்சியையும் சாராதவர்களும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்த இடத்தில் உள்ளனர். 2022 மே 09 ஆம் திகதி நடந்த சம்பவத்தைப் பற்றி நான் மீண்டும் குறிப்பிடத் தேவையில்லை. நாட்டு மக்கள் ஒடுக்கப்பட்டதால், போராட்டங்கள் வெடித்தன.

இந்த பிரச்சாரங்களை சிலர் பயன்படுத்திக் கொள்ள முயன்றனர். இறுதியில் சம்பிரதாய கட்சிகளால் நாட்டின் தலைமைத்துவத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. 2021 டிசம்பர் 2021 இல் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

நாட்டின் முன்னேற்றத்திற்கு இதுவே அவசியம்: ரணில் வலியுறுத்து | Ranil S Concern On Political Culture

ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்தன. இந்தக் கூட்டத்திற்கு தமிழ் கூட்டணியின் இரா. சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் மாத்திரமே வருகை தந்தனர்.

 எதிர்க்கட்சித் தலைவர்தான் மாற்றுப் பிரதமர். அவர் பஸ் டிரைவர் அல்ல. எனவே, இதில் பங்கேற்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியும் அன்றிருந்த நெருக்கடி தொடர்பில் செயற்பட முன்வரவில்லை.

அதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மே மாதம் 9ஆம் திகதி பதவி விலகினார். அப்போது ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்கும் நிலையில் மொட்டுக் கட்சி இருக்கவில்லை.

தொடருந்தின் முன் பாய்ந்து உயிரிழந்த இளைஞர் : காவல்துறை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு

தொடருந்தின் முன் பாய்ந்து உயிரிழந்த இளைஞர் : காவல்துறை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு

அமைச்சர்கள் பதவி விலகல்

அந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அமைச்சர்கள் பதவி விலகினர். நாங்கள் பிரிட்டிஷ் முறையைப் பற்றி பேசுவதால், மாற்று பிரதமர் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa)  பதவி விலகினால், சம்பிரதாயப் படி எதிர்க்கட்சித் தலைவருக்கே முதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பலரும் தெரிவித்தனர். அது தொடர்பில் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.

யாராக இருந்தாலும் உதவத் தயார் என நான் அன்று கூறினேன். ஆனால், மே 10 ஆம் திகதி பொறுப்பேற்க வருமாறு அறிவிக்கப்பட்டும் அவர் வரவில்லை. பிரதமர் பதவியை ஏற்பதில்லை என முடிவு செய்திருந்தனர். அவர் தனது கடமையை நிறைவேற்றவில்லை.

குறுகிய அரசியல் நோக்கில் செயற்பட முயன்றதால் அவரால் முன்நோக்கி வர முடியவில்லை. வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நாட்டை எவ்வாறு மீட்பது என்பது குறித்து சிலர் யோசனைகளை முன்வைத்தனர். ஆனால் பொறுப்பு தேடிவந்த போது ஏற்க விரும்பவில்லை.

ஜே.வி.பி இதற்காக முயற்சி கூட எடுக்கவில்லை. ஆனால் இந்த பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டோம். அப்போது, ​​நாடு வங்குரோத்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதிபர் பதவியில் யார் இருக்கிறார் என்பதை நான் பொருட்படுத்தவில்லை.

நாட்டின் முன்னேற்றத்திற்கு இதுவே அவசியம்: ரணில் வலியுறுத்து | Ranil S Concern On Political Culture

ஆனால் அந்த நேரத்தில் நான் நாட்டைக் காப்பாற்ற விரும்பினேன். அந்த சமயத்தில் இவ்வாறான சவால்களை நாம் எதிர்கொண்டிருந்தோம். 1971 கிளர்ச்சியின் போது ஜே.ஆர். ஜெயவர்தன எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு ஆதரவு வழங்கினார்.

அவரது மகனைக் கூட ஒரு சந்தர்ப்பத்தில் கைது செய்தார். ஆனால் நிலைப்பாட்டை மாற்றவில்லை. 1989 ஆம் ஆண்டில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு ஆதரவளிப்பதாக சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் அமைச்சர் ரத்வத்த ஆகியோர் அதிபர் பிரேமதாசவிற்கு அறிவித்திருந்தார்கள்.

 

நாளை முதல் மின் கட்டண குறைப்பு: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

நாளை முதல் மின் கட்டண குறைப்பு: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

வங்குரோத்து நிலை

நாங்கள் இப்போதுதான் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளோம். இப்போது உலகம் எம்மை கடனை செலுத்தக் கூடிய நாடாக ஏற்றுக்கொண்டுள்ளது.

நாம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கையின் கடன்வழங்குநர் குழு, சீனா எக்சிம் வங்கி மற்றும் தனியார் பிணைமுறிப் பத்திர உரிமையாளர்களுடன் இணக்கம் காணப்பட்ட உடன்படிக்கைகளை அவ்வாறே நடைமுறைப்படுத்துகிறோம்.

நாங்கள் வெவ்வேறு வாக்குறுதிகளை வழங்க முடியாது. இனிமேலும், சம்பிரதாய அரசியலில் ஈடுபட வாய்ப்பில்லை என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். மேலும், நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால், நாட்டில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அதன்போது, ஏற்றுமதியை நோக்கிய நவீன பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும். 85 பில்லியன் டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2048 ஆம் ஆண்டாகும்போது 350 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க வேண்டும். சரியாக செயல்பட்டால் அந்த இலக்கை அடையலாம்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு இதுவே அவசியம்: ரணில் வலியுறுத்து | Ranil S Concern On Political Culture

சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகள் ஒரே நிலையில் இருந்து செயற்பட்டதால் இன்று முன்னேறியுள்ளன. அரசியல் செய்யும் போது அடிப்படை ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை முன்னோக்கி நகர்த்த வேண்டும். இன்று பலர் இந்தக் கட்டமைப்பை உடைக்க விரும்புகிறார்கள்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் கடந்த வாரமும் அதற்கு முன்னரும் நாம் எத்தனை வேலைநிறுத்தங்களை எதிர்கொண்டோம். 

வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமைச்சர் அலி சப்ரி!

வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமைச்சர் அலி சப்ரி!

பொருளாதார கட்டமைப்பு

இந்த ஆண்டு செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் அதிபர்த் தேர்தல் நடைபெற இருப்பதே இதற்குக் காரணம். வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஒரு கட்சியைப் பிடிக்கவில்லை என்றால் மற்றொரு கட்சிக்கு வாக்களியுங்கள்.

ஆனால் இந்த பொருளாதார கட்டமைப்பை உடைக்கவே அவர்கள் முயன்றனர். இப்போது நாடு பெற்ற வெற்றியை உறுதி செய்து, நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்வதா அல்லது பழைய முறைப்படி தொடர்வதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

இன்று இந்தச் சந்திப்பிற்கு நீங்கள் வருகை தந்தமை பாரிய பலம் என்றே கூற வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றுவோம்.

05 வருடங்களின் பின்னர் மீண்டும் கட்சி அரசியலில் ஈடுபடுவோம். நாட்டிற்கு நிலையான பொருளாதார முறைமை அவசியம். பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் தீவிர வலதுசாரிகள் வெற்றி பெறுவர் என்றே அனைவரும் நினைத்தனர்.

ஆனால், அதற்கு நடுவில் வலதுசாரியும், இடதுசாரியும் நாம் போட்டிக்குப் போகாமல் அந்த தொகுதிகளில் மூன்றாம் தரப்பை நீக்குவோம் என்று முடிவு செய்தனர்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு இதுவே அவசியம்: ரணில் வலியுறுத்து | Ranil S Concern On Political Culture

எனது கட்சியில் மூன்றாம் தரப்பு இருந்தால், எனது கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும். நீங்களும் உங்கள் கட்சியை நீக்க வேண்டும். இப்போது இது வேறு பக்கம் திரும்பியுள்ளது. அதற்கேற்ப இணைந்து செயல்பட்டு முன்னேற வாய்ப்புகள் உள்ளன.

அந்த நிலையை இந்த நாட்டில் உருவாக்க வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சியை உறுதிப்படுத்தி நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முன்னோக்கி செல்வோம்.

நாம் எப்போதும் பிச்சைக்கார நாடாக இருக்க முடியாது. பொருளாதார ரீதியில் கீழ் நோக்கிச் செல்ல முடியாது. வலுவான பொருளாதாரத்துடன் நாட்டை முன்னேற்ற வேண்டும். அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபடுமாறு அழைக்கிறோம்.

இன்று உங்களின் வருகைக்கு நாம் நன்றி கூறுகிறோம்.” என்று அதிபர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். தீவகத்தில் திறந்து வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம்

யாழ். தீவகத்தில் திறந்து வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

02 Sep, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
மரண அறிவித்தல்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Markham, Canada

16 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, இத்தாலி, Italy

23 Aug, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொழும்பு

25 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்

சுன்னாகம், யாழ்ப்பாணம், பூவரசங்குளம், வவுனியா

16 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், Victoria, BC, Canada

17 Aug, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முள்ளிவாய்க்கால், கணுக்கேணி

24 Jul, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
அகாலமரணம்

வல்வெட்டித்துறை, Toronto, Canada

13 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Boston, United States

22 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Eibergen, Netherlands, Catford, United Kingdom

21 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், மெல்போன், Australia

02 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, உரும்பிராய், இரத்தினபுரி, கொழும்பு, Harrow, United Kingdom

21 Jul, 2024
மரண அறிவித்தல்

மல்லாகம், Castrop-Rauxel, Germany

16 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சிவபுரம், வவுனிக்குளம்

10 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, பேர்ண், Switzerland

20 Aug, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, பூந்தோட்டம், Scarborough, Canada

18 Aug, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சுன்னாகம், கைதடி

19 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, டோட்மண்ட், Germany

15 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Toronto, Canada

14 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024