ரணில் சஜித் கூட்டணியின் பேச்சுவார்த்தை வெற்றி : ஆட்டம் காணுமா அநுர அரசு
எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) என்பன இணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இதுதொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் நேற்று முன்தினம் (22.01.2025) மாலை இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், அடுத்துவரும் கலந்துரையாடல்களில், எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி மேலும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி
இந்த பேச்சுவார்த்தையின்போது பல்வேறு பொது இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
இதற்கு அப்பால், கட்சித் தலைவர்கள் இருவரும் சந்தித்து இந்த விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்தாலோசித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலில் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை.
கூட்டணியின் தலைமைத்துவம்
ஆரம்பகட்டமாக ஒரே நிலைப்பாட்டில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பிலேயே தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த புதிய கூட்டணியில் எதிர்காலத்தில் ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
இருந்தபோதும் கூட்டணிக்கான சின்னம், பெயர் என்பன தொடர்பில் இன்றும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன் கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பிலும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |