சற்று நேரத்தில் கூடும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு
இலங்கை தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
குறித்த கூட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடு, தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த கூட்டத்தில் ஆராயப்படவுள்ளன.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்
இதுதவிர, இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு, அதிகார பகிர்வு, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளன.
இதேவேளை, தான் தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடல் செய்யவே சென்னை செல்ல இருந்ததாகவும் அதன் காரணமாகவே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக சுமந்திரன் (M. A. Sumanthiran) யாழில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டி இருந்தார்.
விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது எனக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட சதியாக கருதுவதாகவும் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சுமந்திரன் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறீதரன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தற்போது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |