அநுர அரசாங்கத்தை பாதுகாத்த ரணில்: வெளிப்படையாக கூறிய விடயம்
தற்போதைய அரசாங்கதிற்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில், அதனை தடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
அண்மையில் மாத்தறையில் (Matara) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வழக்குகளை தாக்கல் செய்ய சட்டத்தரணிகள் குழுவொன்று முன்மொழிந்த போதிலும் தாம் அதனை தடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி அதன்போது தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர் சம்பளம்
மிகச்சிறிய சிறுபான்மையினரால் பிரதமர் நியமனம் மற்றும் தேர்தல் திகதி தொடர்பான பிரச்சினை முன்வைத்து அந்த வழக்குகள் இரண்டும் வழக்குகள் தாக்கல் செய்யப்படவிருந்ததாக ரணில் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியாவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற அநுர குமார திஸாநாயக்க செயற்படவில்லை எனவும், அரச ஊழியர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அவர்களின் சம்பளத்தை அதிகரிக்க மறந்துவிட்டதாகவும் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |