செங்கடலை பாதுகாக்க சிறிலங்கா கடற்படையை அனுப்புகிறார் ரணில்
செங்கடலைப் பாதுகாக்கவும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் சிறிலங்கா கடற்படையை அனுப்பவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காசா மீதான இஸ்ரேல் படையினரின் தாக்குதலை அடுத்து யேமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் ஊடாக பயணிக்கும் கப்பல்களுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஹவுத்தி கிளச்சியாளர்களின் அச்சுறுத்தல்
குறிப்பாக கப்பல்களை கடத்துதல் அவற்றின் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பின்புலமாக ஈரான் உள்ளதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
செங்கடலைப் பாதுகாக்கும் பணியில் சிறிலங்கா கடற்படை
இந்த நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல்கள் காரணமாக செங்கடல் ஊடாக வர வேண்டிய கப்பல்கள் தென்னாபிரிக்காவை சுற்றி வருகின்றன.
இதனால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து பொருட்கள் விலை அதிகரித்துள்ளன.
எனவே செங்கடலைப் பாதுகாக்கும் பணியில் சிறிலங்கா கடற்படையும் இணைந்து கொள்ளும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |