ரணில் அரசை விரட்டியடிக்க வேண்டும் : வசந்த முதலிகே கொந்தளிப்பு
நாடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமாயின்அதிபர் ரணில்(ranil) தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்பட வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் பிரதிநிதி வசந்த முதலிகே(Wasantha Mudalige) இதனைத் தெரிவித்தார்.
இந்த நாடு சுபீட்சமாக வேண்டுமெனில் ரணில் தலைமையிலான அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று கூறி வருகின்றோம்.
வேலை இல்லை, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து இல்லை
இன்று நாட்டில் 26 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். மேலும் முப்பது சதவீதமான ஏழைகள் இந்த நாட்டில் உள்ளனர். முப்பத்தாறு சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர்.
நாட்டின் வளங்கள் விற்கப்பட்டு நாடு அழிக்கப்படுகிறது.
நூறு மில்லியன் டொலர் கடன்
இப்போது நூறு மில்லியன் டொலர் கடன் வாங்கப்பட்டுள்ளது.ரணில் கடன் வாங்கி கோப்பையை வென்றுள்ளார்.
எனவே நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

