35 ஆண்டுகளுக்கு முன்பே சிறைக்கு செல்லவேண்டிய ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 35 ஆண்டுகளுக்கு முன்பே சிறைக்குச் சென்றிருக்க வேண்டும் என ஐக்கிய குடிமக்கள் கூட்டணியின் அழைப்பாளர் சமீர பெரேரா கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் உயர்குடியினர் என்று அழைக்கப்படுபவர்களால் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து மோசடி நடவடிக்கைகளையும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
உயரடுக்கின் மோசடி
சிலர், ரணில் விக்ரமசிங்கவைப் பார்த்தவுடன், இந்த சிறிய விடயத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
இது சிறிய விடயமா? மில்லியன் தொகை மோசடி என்பது சிறிய விடயமா?
பலாப்பழத்தைத் திருடிய மனிதன், ஒரு பலகையை திருடிய மனிதன் சிறையில் அடைக்கப்படுகிறான்.
நீங்கள் கூர்ந்து கவனித்தால் ரணில் விக்கிரமசிங்க 35 ஆண்டுகளுக்கு முன்பே சிறைக்குச் சென்றிருக்க வேண்டும்.
அந்த உயரடுக்கின் மோசடி காரணமாகவே ரணில் காப்பாற்றப்பட்டார். படலந்த சித்திரவதை மையம் தொடர்பான வழக்குகளை மூடிமறைத்து நீர்த்துப் போகச் செய்தது யார்?அவரைப் பாதுகாத்தது யார்? யாரும் தங்களைத் தொட முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள்.
எதிர்காலம் சவாலுக்கு உள்ளாகி வருவதால் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர்.” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

