சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2000 வாகனங்கள்: வெளியான தகவல்
சுங்கத்துறை தற்போது கிட்டத்தட்ட 2,000 வாகனங்களை வெளியிடாமல் வைத்திருப்பதாக தெரிவிக்கபடுகின்றது.
குறித்த விடயத்தை வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மின்சார வாகனங்களின் இயந்திர திறனை அறிவிப்பதில் உள்ள சிக்கல் மற்றும் மூன்றாம் தரப்பு நாடுகள் மூலம் கடன் கடிதங்களைத் திறப்பது போன்ற இரண்டு முக்கிய காரணங்களால் இவ்வாறான நிலை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த வாகனங்கள்
இந்தநிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த வாகனங்களில் சுமார் 1,000 மின்சார கார்கள், அவற்றின் இயந்திர திறன் குறித்த தகராறு காரணமாக அவை சுங்கத்துறையின் காவலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீதமுள்ள வாகனங்களின் இருப்பு, மூன்றாம் தரப்பு நாடுகளிலிருந்து கடன் கடிதங்களைத் திறப்பதன் மூலம் வாகனங்களை இறக்குமதி செய்வதால், வாகனங்களை விடுவிக்க முடியவில்லை என இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாத இறுதி
இதனடிப்படையில், கடன் கடிதங்கள் பிரச்சினை காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத இறுதிக்குள் அனைத்து தரப்பினரும் இந்தப் பிரச்சினைகள் குறித்து ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
தாமதக் கட்டணங்கள்
தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு விதிக்கப்படும் அதிக தாமதக் கட்டணங்கள் தொடர்பாக சில நிவாரணங்களை வழங்குமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த இறக்குமதியாளர்கள், “கடந்த மே மாதம் முதல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கான தாமதக் கட்டணம் ரூபாய் 1.5 மில்லியனாகவும் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் ரூபாய் 2.5 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது.
இந்த அதிக தாமதக் கட்டணங்கள் காரணமாக, வாகனங்கள் விடுவிக்கப்பட்டாலும், அவற்றை விற்பனை செய்வதில் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும்” என அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

