ரணில் - ஆளும் கட்சியின் தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை
அதிபர் ரணில் விக்ரமசிங்கவை ஆளும் கட்சியின் தலைவர்கள் இன்று(14) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு இவர்கள் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலந்துரையாலின் நோக்கம்

இன்றைய சந்திப்பு தொடர்பாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு அதிபர் செயலகத்தினால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடுவதே இந்தச் சந்திப்பின் நோக்கமாகவுள்ளது.