இந்திய - இலங்கை உறவில் முக்கிய புள்ளியாக மாறிய ரணில்

Ranil Wickremesinghe Government Of Sri Lanka India
By Mathu Jul 12, 2023 03:28 AM GMT
Report

சிறிலங்கா அதிபரின் இந்தியாவிற்கான விஜயத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா கூறியுள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா நேற்று(11) மாலை மீண்டும் டெல்லி திரும்பியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவுக்கு அரச முறை பயணமாக செல்லவுள்ள நிலையில், இந்தப்பயணம் தொடர்பான ஏற்பாடுகளுக்காக இலங்கைக்கு வந்த அவர் சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

மறுசீரமைப்பு வேலைத்திட்டம்

இந்திய - இலங்கை உறவில் முக்கிய புள்ளியாக மாறிய ரணில் | Ranil Srilanka India Secretary Kwatra Meet

இதன்போது, இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ராவிற்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார். 

தனது இலங்கை விஜயம் தொடர்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,  “சிறிலங்கா அதிபர், இந்தியாவிற்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்துக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதே  எனது விஜயத்தின் நோக்கமாகும்.

சிறிலங்கா அதிபரின் இந்திய விஜயமானது, இருதரப்பு உறவில் நேர்மறையான மாற்றமொன்றின் புள்ளி என்பதனை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியாகவே அமைந்தன.

பொருளாதார பங்குடைமை

 இந்திய - இலங்கை உறவில் முக்கிய புள்ளியாக மாறிய ரணில் | Ranil Srilanka India Secretary Kwatra Meet

ரணிலின் புதுடில்லி பயண ஏற்பாடுகளை ஆராய இந்திய இராஜதந்திரி இலங்கை வருகை

இந்த விஜயத்துக்கு முன்னதாக எம்மால் முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் முக்கிய விடயங்கள், விஜயத்தின் போதான செயற்பாடுகள், இலங்கை தலைமைத்துவத்தின் முன்னுரிமைகள் ஆகியவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

உறவின் பலம், உறவினை அடிப்படையாகக் கொண்ட ஒத்துழைப்பின் பல்வேறு கூறுகள், இந்தியாவும் இலங்கையும் அனுபவிக்கும் பொருளாதார பங்குடைமை முழுவதும் எதிர்வரும் ஆண்டுகளில் காணப்படும் முக்கிய கூறுகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சிறிலங்கா அதிபரின் இந்திய விஜயத்தின் வெற்றியினை உறுதிப்படுத்துவதே எமது பிரதான இலக்காகும். அவரது விஜயத்தை வெற்றிகரமான ஒன்றாக மாற்றவும் அவ்வழியில் தங்கள் உறவை வெற்றியடையச் செய்யவும் தாம் எதிர்பார்ப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019