கை விலங்குடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரணில்

Sri Lanka Police Ranil Wickremesinghe Sri Lanka Law and Order
By Raghav Aug 22, 2025 05:49 PM GMT
Report

புதிய இணைப்பு 

விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

கை விலங்குடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரணில் | Ranil Taken To Prison Bus In Handcuffs


முதலாம் இணைப்பு 

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சில நிமிடங்களுக்கு முன்பு கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திலிருந்து சிறைச்சாலை பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22.08.2025) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில், தனது பதவிக் காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையைத் தொடங்கியிருந்தது.

ரணிலின் விளக்கமறியல் - குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் : நீதிமன்ற வளாகத்தில் கடும் பதற்றம்

ரணிலின் விளக்கமறியல் - குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் : நீதிமன்ற வளாகத்தில் கடும் பதற்றம்

முன்னாள் ஜனாதிபதி

இது தொடர்பான ஆதாரங்களை ஜூன் 24 அன்று குற்றப் புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

கை விலங்குடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரணில் | Ranil Taken To Prison Bus In Handcuffs

அதைத் தொடர்ந்து, விசாரணை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சாண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

அதன்படி, விசாரணை தொடர்பாக வாக்குமூலங்களைப் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சுமார் நான்கரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.

பின்னர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைவிலங்கு போடப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்திலிருந்து சிறைச்சாலை பேருந்தில் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். 

ரணிலின் கைது - யூடியூபர் சுதாவை சாடிய எதிர்க்கட்சி எம்.பி

ரணிலின் கைது - யூடியூபர் சுதாவை சாடிய எதிர்க்கட்சி எம்.பி

    செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்