இலங்கை - நேபாளத்திற்கு இடையில் இருதரப்பு இணக்கப்பாடு! ஆரம்பமாகிய பேச்சுவார்த்தைகள்
இணக்கப்பாடு
இலங்கை மற்றும் நேபாளத்திற்கு இடையில் இருதரப்பு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றது.
சிறிலங்காவிற்கான நேபாள தூதுவர் பாஷூ தேவி மிஷ்ரா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் செயலகத்தில் சந்தித்தார்.
சுற்றுலாத்துறை, பல்கலைக்கழக கல்வி மற்றும் இரண்டு நாடுகளினதும் இளைஞர்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதிபர் ரணிலை சந்தித்த முதலீட்டாளர்கள்
இது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் வெளிவிவகார அமைச்சு மற்றும் நேபாள அரசாங்கத்திற்கு இடையில் இடம்பெறவுள்ளதாக அதிபர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் மற்றும் அந்நாட்டின் முதலீட்டாளர்கள் சிலர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து நேற்று கலந்துரையாடியுள்ளனர்.

