மீண்டும் நாடாளுமன்றுக்கு ரணில்! கேள்விக்குறியாகியுள்ள பைஸரின் ஆசனம்
நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதாகவும், அவ்விடத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாகவும் அரசியல் களத்தில் பேசப்படுகிறது என முன்னாள் எம்.பி உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும், ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு பலமான ஆளுமையாக உள்ளார் என்றும், தற்போதைய இக்கட்டான நிலையில் அவர் நாடாளுமன்றத்துக்கு மீண்டும் செல்வது காலத்தின் தேவையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ரணில் விக்ரமசிங்க
“ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு பலமான ஆளுமையாக உள்ளார். தற்போதைய இக்கட்டான நிலையில் அவர் நாளுமன்றத்துக்கு மீண்டும் செல்வது காலத்தின் தேவையாகும்.

அரசாங்கத்தை புகழ்வது எதிர்க்கட்சிகளின் வேலையில்லை.அதற்கு தான் ஆளுங்கட்சியில் 159 உறுப்பினர்கள் உள்ளார்கள்.
ஆளுங்கட்சியினர் அரசாங்கத்தின் தவறுகளையும் சரி என்று புகழ்வார்கள். ஏனெனில் சரி எது, பிழை எது என்று அவர்களால் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க முடியாது.
அரசாங்கங்களின் குறைகளை சுட்டிக்காட்டி, மக்களுக்கு அவற்றை எடுத்துரைப்பதே எதிர்க்கட்சிகளின் பொறுப்பு அதனையே நாங்கள் செய்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |