சிறிலங்காவின் ஜெனிவா மிஷன்: நல்லிணக்கப் பொறியுடன் சுவிஸ் பறந்த ரணில்!
சிறிலங்காவின் முதன்மை தலையாளிகளின் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்டுக்கொள்ளும் செலவீனங்கள் குறித்து எதிர்கட்சிகள் பேசினாலும் இன்று காலை ரணில் சுவிட்சர்லாந்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் யாஹூ நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கெடுக்கும் நாடுகளில் இலங்கைக்குரிய பொருளாதார உதவிகளை உறுதிப்படுத்திகொள்ளும் பயணமாக இந்த பயணம் அமைந்துள்ளது.
ஏனெனில் யாஹூ நகரில் உலகின் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் நாடுகளின் முக்கிய தலைமைகள் அனைத்துலக நிறுவனங்கள் உட்பட்ட ஏராளமான பிரபலங்கள் ஒன்று கூடுவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு இவர்கள் கூடும்போது உலகின் அரசியல் பொருளாதாரம் சமூக சுற்றுச்சூழல் தொடர்பிலும் தீர்மானிக்கப்படுகின்றது.
இவ்வாறான முக்கிய அரங்கில் தமது நாட்டுக்குரிய ஆதாயங்களை எதிர்பார்த்து சிறிலங்காவின் முதன்மை தலையாளியும் பங்கேற்பது எதிர்பார்த்த விடயமாக கருதப்படுகிறது.
எனினும் ரணிலின் இந்த பயணத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத இன்னுமொரு இலக்கு உள்ளது. அதாவது ஜெனிவா மனித உரிமை அரங்கில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடக்கவிருக்கும் இலங்கை குறித்த முக்கிய நிகழ்ச்சி நிரலை மையப்படுத்திய நகர்வாக இருக்குமென கருதப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் வருகின்றது இன்றைய செய்தி வீச்சு.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |