ஷாருக்கான் போல நாடகமாடும் ரணில் - எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு
அதிபர் ரணில்விக்ரமசிங்க, ஷாருக்கான் போல உடையணிந்து நாடகமாடிக் கொண்டிருக்கின்றார் என தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அமைச்சர் கஞ்சன உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் வீட்டுக்குச் செல்ல நேரிடும் எனவும் எச்சரித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
மின்சக்தி அமைச்சர் கஞ்சனவிஜேசேகர யாரோ வழங்கிய கயிற்றை விழுங்கிவிட்டார். அதனாலேயே மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க முயலுகிறார். இந்த முயற்சியின் பிரதிபலனாக கஞ்சன விஜேசேகர வீட்டுக்கு செல்லப்போகிறார். ஒட்டுமொத்த அரசாங்கமும் வீட்டுக்கு செல்லப்போகின்றது.
கஞ்சன விஜேசேகர செய்யும் பாவச் செயல்
மக்கள் சுமையை அதிகரித்து தரகு பணங்களுக்காக இவ்வாறு மின் கட்டணத்தை அதிகரிப்பது என்பது கஞ்சன விஜேசேகர செய்யும் பாவச் செயல். மக்களின் பணத்தை கொள்ளையடிக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
மூவேளை உணவுக்கு வழியின்றி நாட்டு மக்கள் இருக்கும்போது, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதால் மக்களுக்கு என்ன நடக்கும் என்பதை அறிந்துகொள்ள முடியாதளவுக்கு சிறுபிள்ளையாக கஞ்சன இருக்கிறார் என்றார்.
ஷாருக்கான் போல ஆடையணிந்து உரையாற்றும் ரணில்
இவ்வாறான நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, நடிகர் ஷாருக்கான் போல ஆடையணிந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கிறார். நாட்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கூட்டத்துக்கே ரணில் தலைவர். எனவே அந்த நாடகங்களை ரணில் நிறுத்திகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாட்டை பொருளாதார
நெருக்கடியிலிருந்து
மீட்டெப்பதற்குப்
பதிலாக, திருட்டு
ராஜபக்சர்கள் கூட்டத்தைப்
பாதுகாத்துகொண்டிருக்கும்
ரணில் போன்ற அதிபர்
நாட்டுக்கு தேவையா எனவும்
கேள்வி எழுப்பினார்.