சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள ரணில் விக்ரமசிங்க
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க 12 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சுவிட்சர்லாந்திற்கு பயணித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க இன்று (13) காலை பயணித்துள்ளார்.
Emirates Airlines EK 649 என்ற விமானத்தின் மூலம் இன்று அதிகாலை 3:00 மணியளவில் பயணித்துள்ளார்.
உரை நிகழ்த்தவுள்ள அதிபர்
இந்த மாநாட்டில் எரிசக்தி வளத்தை உறுதி செய்யும் இலங்கையை கட்டியெழுப்புதல் என்னும் தலைப்பில் அதிபர் உரை நிகழ்த்த உள்ளார்.
சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ள உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, எதிர்வரும் 18ஆம் திகதி அதிபர் உகாண்டாவிற்கு பயணிக்கவுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பிளவுபடாத நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உகாண்டாவிற்கு பயணிக்கவுள்ளார்.
உகாண்டா மாநாட்டில் பங்கேற்றல்
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை இந்த மாநாடு உகாண்டாவில் இடம்பெறவுள்ளது.
குறித்த மாநாட்டில்அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் பல அமைச்சர்கள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு அதிபர் எதிர்வரும் 24ஆம் திகதி நாடு திரும்ப உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |