ரணிலை கைது செய்தமைக்கு காரணம் இது தான் - அம்பலப்படுத்தும் தமிழ் எம்.பி
ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) கைது செய்தமை அரசியல் பழிவாங்கல் என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைது செய்யப்பட்ட பின்னர், ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தனிப்பட்ட பயணத்திற்காக அரச நிதி
ரணில் விக்ரமசிங்க தனது தனிப்பட்ட பயணத்திற்காக அரச நிதியைப் பயன்படுத்தியதாகவும், அவரது மெய்க்காப்பாளர்களுக்கும் அரசு பணம் கொடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி கடந்த (26.08.2025) கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்வாறான நிலையில், அரசியல்வாதிகளுக்குப் பயம் காட்டுவதற்காகவே ரணில் விக்ரமசிங்கவின் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் பழிவாங்கல் இன்றி ஊழல் செய்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

