தெரிந்து கொண்டே ஆபத்தில் சிக்கிய ரணில் : அம்பலமான இரகசிய திட்டம்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் நேற்று (22.08.2025) பதிவாகியது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்தமை, இலங்கை வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சம்பவமாக பதிவாகியுள்ளது.
நேற்று (22) மதியம், ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
தனக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையின் அரசியலமைப்பின் படி, முன்னாள் ஜனாதிபதி பதவியில் உள்ள ஒருவரை கைது செய்யவோ அல்லது அவர் மீது வழக்கு தொடரவோ முடியாது.
எனினும், முன்னாள் ஜனாதிபதிகளின் விடயத்தில் இந்த அரசியலமைப்பு எவ்வாறு செயற்படும் என்பதில் தெளிவான விளக்கங்கள் இல்லை.
ஆனாலும், கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உரிய சலுகைகளும் வரப்பிரசாதங்களும் வழங்கப்பட்டன. எனினும், தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை நீக்குகின்றது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
