எகிப்து மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க..!
Ranil Wickremesinghe
President of Sri lanka
Egypt
By Kanna
அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் எகிப்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க
அதிபர் ரணில் விக்ரமசிங்க மாலைதீவின் சபாநாயகருமான மொஹமட் நஷீட் மற்றும் நோர்வேயின் முன்னாள் சுற்றாடல் மற்றும் காலநிலை அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விஜயத்தின் போது அதிபரின் சுற்றாடல் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவும் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வாரங்களில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி