தேர்தல் தொடர்பில் இரகசிய நகர்வுகள்! மறைமுக பதிலால் குழப்பிய ரணில்
அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளீர்களா என ரணில் விக்ரமசிங்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு குழப்பும் வகையில் பதிலளித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்விலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஊடகவியலாளர் (கேள்வி)
நீங்கள் சிறிலங்காவின் அதிபரானதும் தனித்துவிட்டதாக தெரிவித்தீர்கள் - நாங்கள் அடுத்த வருடம் அதிபர் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம் உங்களின் எதிர்கால திட்டங்கள் என்ன நீங்கள் மீண்டும் அதிபராவதற்காக தேர்தலில் போட்டியிட விரும்புகின்றீர்களா ஐக்கிய தேசிய கட்சியை வலுப்படுத்தி அதன் சார்பில் போட்டியிடப்போகின்றீர்களா அல்லது கூட்டணியை ஏற்படுத்தப்போகின்றீர்களா..?
ரணில் (பதில்)
ஐக்கியதேசிய கட்சி அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறவிரும்புகின்றது ஏன் என்றால் அவர்கள் மாத்திரமே உண்மையை பேசினார்கள்.
அதன் காரணமாகவே அவர்கள் அரசியலில் இருந்து அகற்றப்பட்டார்கள். அதுவே அவர்களின் பலமான விடயமாக காணப்படப்போகின்றது.
பல புதிய முகங்கள் உள்ளன அரசாங்கத்தில் எதிர்கட்சியில் உள்ள பலர் உள்ளனர் அவர்களும் போட்டியிடுவார்கள்.
நாங்கள் வங்குரோத்துநிலையை இல்லாமல் செய்வதே எனது முதல் பணி. வங்குரோத்து நிலையை இல்லாமல் செய்ததும் நாங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளோம் அந்த தருணத்தில் என்ன செய்வது என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும்.
வங்குரோத்து நிலையை ஒழிப்பதற்காக உங்கள் அனைவரினதும் ஆதரவை பெறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.
ஊடகவியலாளர் (கேள்வி)
உங்கள் திட்டங்கள் நோக்கங்கள் வெற்றிபெற்றால் நீங்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா..?
ரணில் (பதில்)
நான் என்ன செய்யவேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள் நான் உங்களை கேட்கின்றேன்
ஊடகவியலாளர்
நான் அதற்கு பதிலளித்தால் பல எதிர்வினைகள் வெளியாகலாம்.
ரணில்
விடை என்ன?
ஊடகவியலாளர்
ஏன் போட்டியிடக்கூடாது
ரணில்
அப்படியானால் ஏன் மக்களிடமிருந்து எதிர்வினைகள் வெளியாகலாம் என தெரிவிக்கின்றீர்கள்?
ஊடகவியலாளர்
நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை ஆனால் நான் உங்களின் தனிப்பட்ட திட்டங்கள் என்னவென்பதை அறியவிரும்புகின்றேன்.
ரணில்
நான் அது முடிவடையும்வரை காத்திருப்பேன் என தெரிவித்தேன்.
பொருளாதார நிலைமையை சாதகமான விதத்தில் மாற்றியமைப்பதே எனது நோக்கம்
நாங்கள் அந்த இலக்கை நெருங்கிவிட்டோம், நான் அரசியல் இல்லாமல் புதிய பொருளாதாரத்தை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன் - நாங்கள் அது குறித்து கலந்துரையாடுவோம்.
இந்த நிலையில்,நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வரவுசெலவு திட்ட விவாதத்தின் போது அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நிச்சயம் இடம்பெறும் என குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க தற்போது தனது முடிவு குறித்து இரகசியம் பேணுவது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் கேள்வியை உண்டாக்கியுள்ளது.