ரணில் பதவி துறக்கும் நாளை கணித்த சோதிடர்
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Sumithiran
பதவியை துறப்பார் ரணில்
ரணில் விக்ரமசிங்கவின் ஜாதகப்படி எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதிக்கு பின்னர் அவர் அதிபர் பதவியை துறக்க நேரிடும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திர தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப இன்னும் மூன்று மாதங்களுக்கு நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலையும் பொருளாதார ஸ்திரமின்மையும் நிலவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபயவுக்கும் வெளியேறும் நாள் குறிப்பு
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தான் இவை அனைத்தையும் கூறுவதாகவும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்து வெளியேறும் நாளை சரியாக கணித்த கணிப்பாளர் தாம் எனவும் சரச்சந்திர மேலும் தெரிவிக்கின்றார்.
இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்
