மைத்திரியுடனான ரணிலின் ‘டீல்’ அம்பலம்
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு(maithripala sirisena) ரணில்(ranil wickremesinghe) நிபந்தனை விதித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான(Jagath Vithana) நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.
இதன்படி அர்ஜுன மகேந்திரன்(Arjuna Mahendran) மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
நிபந்தனையில் பேரில் நிதியளித்த ரணில்
இவ்வாறு நிபந்தனை விதித்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி பிரச்சாரத்திற்கு நிதியளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
பிணைமுறி மோசடி தொடர்பாக நடத்தப்படும் புதிய விசாரணை குறித்து மேலும் பலவற்றை வெளிப்படுத்துவேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன்
பிணை முறிமோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் தற்போது சிங்கப்பூரில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
